Car-Lorry Accident: கார் மீது சரக்கு லாரி மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி..! 5 பேர் படுகாயம்..!

சென்னையில் காரில் கோவிலுக்கு சென்றுவிட்டு குடும்பத்தோடு வீட்டிற்கு திரும்பும்போது, லாரி மோதி 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Car-Lorry Accident: கார் மீது சரக்கு லாரி மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி..! 5 பேர் படுகாயம்..!
Chengalpattu Car Lorry Accident (Photo Credit: @dinathanthi X)

ஜூன் 07, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள போரூர் வளசரவாக்கத்தில் பாலமுருகன் நகரை சேர்ந்த வினோத் (வயது 33) என்பவர், தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, சென்னைக்கு திரும்பி வரும் போது, திடீரென மழை பெய்துள்ளது. USA Vs PAK: அமெரிக்கா-பாகிஸ்தான் போட்டியில் சாதித்த இந்தியன்.. இதை நீங்க கவனிச்சீங்களா?..!

இந்நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (Trichy-Chennai National Highway) மதுராந்தகம் அடுத்துள்ள படாளம் கூட்ரோடு பகுதியில் கார் வந்துகொண்டிருக்கையில், அதன் பின்னால், சரக்கு ஏற்றி வந்த லாரி கார் மீது அதிவேகமாக மோதியது. இதில், காரில் பயணித்த பார்வதி, சிறுவன் சச்சின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 5 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த அந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், உயிரிழந்த 2 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jun 07, 2024 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).