Kallakurichi Accident: உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து.. 2 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..!
உளுந்தூர் பேட்டை அருகே கார் சாலையோரம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
ஜூன் 04, கள்ளக்குறிச்சி (Kallakurichi): காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி சேர்ந்த எட்டு பேர் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அங்கு திதி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வரும்போது உளுந்தூர்பேட்டை அருகே அவர்களது கார் சாலையோரம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் அருகே இருந்த பொதுப்பணித்துறை அதிகாரி உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Sivakarthikeyan Announces Birth Of Baby Boy: 3வது குழந்தைக்கு தந்தையான சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

