20 Years Imprisonment To Grocery Shop Owner: 14 வயது சிறுமி கர்ப்பம்; மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை..!
திருப்பூரில் 9-ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏப்ரல் 27, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாஸ்கோ நகரை சேர்ந்தவர் சிவா (வயது 62). இவர் அதே பகுதியில் மளிகை கடை (Grocery Shop Owner Rape Minor Girl) ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த 14 வயது நிரம்பிய 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கரப்பமடைந்தார். Land Subsidence In Kashmir: சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மூழ்கிய நிலப்பகுதி; ஜம்முகாஷ்மீரில் அதிரவைக்கும் சம்பவம்.! மக்கள் பீதி.!
இதுகுறித்து, திருப்பூர் வடக்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட சிவா மீது போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து, குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிவா என்பவருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
(The above story first appeared on LatestLY on Apr 27, 2024 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

