College Students Attack Ice Vendor: குடிபோதையில் ஐஸ் வியாபாரியை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது; 3 பேர் தலைமறைவு..!

சென்னையில் குடிபோதையில் வந்த கல்லூரி மாணவர்கள் ஐஸ் வியாபாரியை தாக்கிய வழக்கில் 3 கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியுள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

College Students Attack Ice Vendor: குடிபோதையில் ஐஸ் வியாபாரியை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது; 3 பேர் தலைமறைவு..!
Arrest (Photo Credit: Pixabay)

ஜூன் 21, சென்னை (Chennai News): சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 49). இவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள முனியப்பாநகர் பகுதியில் உள்ள ஐஸ் குடோனில் தங்கி, தினமும் மூன்று சக்கர வாகனத்தில், சென்னை மற்றும் நெற்குன்றம் ஆகிய பகுதியில் ஐஸ் வியாபாரம் (Ice Vendor) செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி அன்று இரவு கோயம்பேடு காவல்நிலையம் அருகே கருப்பையா ஐஸ் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில், மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஐஸ் வேண்டும் என கருப்பையாவிடம் கேட்டுள்ளனர். அவர், ஐஸ் எடுத்து கொடுத்தபோது, ஐஸ் வேண்டாம் எனக்கூறி கிண்டல் செய்துள்ளனர். Deepfake Video Fraud Investment: முகேஷ் அம்பானி டீப்ஃபேக் வீடியோவை பயன்படுத்தி ரூ.7 லட்சம் மோசடி; மர்ம கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு..!

இதனால், கோபமடைந்த கருப்பையாவுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கும்பல், கருப்பையாவை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன், 700 ரூபாயை பணத்தை பறித்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் கருப்பையா புகார் அளித்தார். புகாரின்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் ஐஸ் வியாபாரியை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்றது தெளிவாக தெரியவந்தது.

குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், கோயம்பேடு பகுதியில் இருந்த 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், நெற்குன்றம் மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக இருக்கும் 3 கல்லூரி மாணவர்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 06:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).