Tambaram Shocker: 16 வயது சிறுமி 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; 16 வயது சிறார்கள் உட்பட 3 பேர் கைது.. தமிழகமே அதிர்ச்சி.!
இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற சிறுமி, 3 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது.
செப்டம்பர் 21, தாம்பரம் (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம், மேலக்கோட்டையூர் பகுதியில் 16 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி கடந்த 18ம் தேதி இரவில், இயற்கை உபாதையை கழிக்க, வீட்டுக்கு அருகே இருக்கும் மறைவான பகுதிக்கு சென்றுள்ளார். அச்சமயம் சிறுமியை மூன்று பேர் கும்பல் பின்தொடர்ந்து வந்ததாக தெரியவருகிறது. Tiruvannnamalai: கணவருக்கு தெரியாமல் லோன் எடுத்து நம்பி கொடுக்குறீங்களா?.. மோசடி தம்பதி எஸ்கேப்.. பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்.!
மூவர் கும்பலால் (Tambaram Girl Gang Rape) கொடுமை:
இயற்கை உபாதையை கழித்துக்கொண்டு இருந்த சிறுமியை கடத்திய மூவர் கும்பல், கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் தந்தை, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
2 சிறார்கள் உட்பட 3 பேர் கைது:
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். இதனையடுத்து, இன்று சுந்தர் (23) என்ற நபரை கைது செய்த அதிகாரிகள், அவருடன் சிறுமியை பலாத்காரம் செய்த 2 சிறார்களையும் கைது செய்தனர். கைதான 2 சிறார்களுக்கு 16 வயது மட்டுமே ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

