Truck Collision Accident: பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு..!
திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 17, தஞ்சாவூர் (Thanjavur News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடிபட்டியை சேர்ந்தவர்கள் இன்று (ஜூலை 17) அதிகாலை திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். First Day of Aadi Month 2024: ஆடி மாதம் முதல் நாள் என்ன செய்ய வேண்டும்..? வழிபடும் முறைகள் என்னென்ன..?
அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி பகுதியில் திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் (Truck Collision) ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற பக்தர்கள் (Pilgrims) மீது மோதியது. இதில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சங்கீதா, லட்சுமி ஆகிய இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

