School Boy Suicide: பள்ளிக்குச் செல்ல மறுத்த மகனை கண்டித்த பெற்றோர்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!
காஞ்சிபுரத்தில் பெற்றோர் கண்டித்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 26, ஸ்ரீபெரும்புதூர் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள படப்பை அருகே ஆரம்பாக்கம் ஆதிபராசக்தி கோவில் தெருவை சேர்ந்த தம்பதி ரிச்சர்ட் - மீனா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் தோனி (வயது 12) ஆத்தனஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சரியாக படிக்காத அவர், பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளார். இதனால், பெற்றோர் அவரை கண்டித்துவிட்டு, வழக்கம் போல வேலைக்குச் சென்றுள்ளனர். Young Man Arrested: திருமண ஆசை வார்த்தைக் கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர்; இளம்பெண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!
இதனையடுத்து ரேசன் கடைக்கு சென்ற தோனி, பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு, மீதி இருந்த பணத்தில் படப்பை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த சிறுவன், கழிவறையில் பெட்ரோலை (Petrol) தன்மீது ஊற்றி, தீயை பற்ற வைத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறியடித்து, கழிவறையில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு, விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை போர்வையால் மூடி மீட்டனர். பலத்த தீக்காயங்களுடன் அவர் சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 17, 5773 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

