Rape File Pic (Photo Credit: Pixabay)

மே 31, கிருஷ்ணகிரி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (Govt Hospital) சிகிச்சை பெற்று வந்தார். இவர், 3-வது மாடியில் உள்நோயாளியாக இருந்தார். அவருக்கு உதவியாக அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் உடன் தங்கியிருந்தார். IT Woman Employee Sexual Harassment: ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; ஆம்னி பேருந்து கிளீனர் கைது..!

சிகிச்சை முடிந்த பிறகு சிறுமியின் தாய் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து, வீட்டுக்கு சென்ற நிலையில் சிறுமி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த சிறுமியின் அக்கா சந்தேகமடைந்து அவரிடன் கேட்டுள்ளார். அப்போது அவர், தாயுடன் மருத்துவமனையில் இருந்து போது, அதே மருத்துவமனையில் அருகில் இருந்த நோயாளிக்கு உதவியாக, கிருஷ்ணகிரி ரயில்வே காலனியை சேர்ந்த மனோஜ் (வயது 19) என்பவர் இருந்தார்.

இவருடன், கேன்டீனில் உணவு வாங்க செல்லும்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர், கடந்த 25-ஆம்தேதி அன்று தன்னை காதலிப்பதாக கூறி, இரவில் மருத்துவமனையின் ஒதுக்குப்புறமான இடத்திற்கு என்னை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் (Rape) செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் அக்கா புகார் கொடுத்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் மனோஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.