Minor Boy Death: பானி பூரி சாப்பிட்ட 17 வயது சிறுவன் உயிரிழப்பு; திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சாலையோரக்கடை விரும்பிகளே உஷார்..!
திண்டுக்கல் சாலையோர உணவகத்தில் பானி பூரி சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நிலை பிரச்னைகள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 11, நத்தம் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள சேத்தூர் ஊராட்சி அய்யனார்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் வேலு (வயது 17). இவர் கடந்த 7-ஆம் தேதி அன்று இரவு சாலையோர உணவகம் ஒன்றில், பானி பூரி (Pani Puri) சாப்பிட்டுள்ளார். அப்போது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. Young Man Suicide By Shooting: காதலித்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டு, வாலிபர் தற்கொலை..!
இதைத் தொடர்ந்து, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், கடந்த 8-ஆம் தேதி (சனிக்கிழமை) மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கடந்த ஜூன் 9-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மகனின் மரணத்திற்கு பானி பூரி தான் முக்கிய காரணம் என அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, நத்தம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நேற்றைய தினம் உணவகத்தில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

