School Boy Dies In Classroom: வகுப்பறையில் உக்காந்திருந்த சிறுவன் துடிதுடித்து பலி; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!
திருச்சியில் உள்ள பள்ளி வகுப்பறையில் 2-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 09, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டம், பாரதியார் சாலையில் புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2-ஆம் வகுப்பில், ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் மாணவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, பிரனீத் மாணவர் மயக்கமடைந்து கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனை அங்கு இருந்த சக மாணவர்கள் யாரும் கவனிக்கவில்லை. பின்னர், அடுத்த வகுப்பிற்கு தயாராகும் போது, பிரனீத் மயங்கி விழுந்து (Fainting) கிடப்பதை கண்டு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். TN Weather Update: கனமழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
இதனையடுத்து, மாணவர் பிரனீத் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை (Heart Surgery) செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, உயிரிழந்த மாணவரின் பெற்றோர் தெரிவிக்கையில், மாணவர் மயக்கமடைந்த நிலையில், ஆசிரியர்கள் அங்கு இருந்திருந்தால் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிருக்கலாம். ஆசிரியர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என வேதனையுடன் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ நன்றி: தந்தி தொலைக்காட்சி
(The above story first appeared on LatestLY on Aug 09, 2024 06:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

