Minor Girl Injured After Bitten By Pet Dog: வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்; மருத்துவ செலவை அதன் உரிமையாளர் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி..!
சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில், தாய், சிறுமி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மே 06, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதஷாவுடன் அங்குள்ள அறையில் வசித்து வந்துள்ளார். ரகு அங்கு பூங்காவின் காவலாளியாக வேலை செய்து வருகிறார். Stunning Catch By Ramandeep Singh: ரமன்தீப் சிங்கின் வியக்கவைக்கும் கேட்ச்; விக்கெட் எடுத்து புல்லரிக்க வைத்த பீல்டிங்..! வீடியோ உள்ளே.!
இந்நிலையில், நேற்று மாலை பூங்கா அருகில் வசித்து வரும் புகழேந்தி என்பவர் அவர் வளர்க்கும் 2 நாய்களுடன் (Pet Dogs) பூங்காவிற்குள் வந்துள்ளார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுதஷாவை அந்த இரண்டு நாய்களும் கடித்தன. இதில் கத்தி அலரிய சிறுமியின் சத்தம் கேட்டு, அவரது தாயார் சோனியா விரைந்து வந்து சிறுமியை காப்பாற்ற முயன்றபோது, அவரையும் அந்த நாய்கள் கடித்துள்ளன.
இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், நாய்களின் உரிமையாளரான புகழேந்தியை நேற்று(மே 5) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரித்ததில் அவர் நாய்களை விட்டுவிட்டு, சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையின் மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்ததை அடுத்து, சிறுமி ஆயிரம் விளக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
(The above story first appeared on LatestLY on May 06, 2024 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

