Baby Killed By Father: பிறந்து 9 நாளே ஆன குழந்தை.. கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கொடூர தந்தை..!
பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை, தந்தையே கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை 19, சென்னை (Chennai): சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார். இவருக்கு வயது 38. இவரது மனைவி விஜயலட்சுமி . ராஜ்குமார் மீன் பாடி வண்டி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 5 மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் இவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கடந்த 7ம் தேதி பிறந்து ஒன்பது நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் காயங்கள் இருந்ததை, பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாயார், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தார். Child Abuse: 12 வயது சிறுமிக்கு முத்தம்.. அந்த போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர்.. நடுரோட்டில் வைத்து அடித்த பெற்றோர்..!
ஆனால் கடந்த 9ம் தேதி குழந்தை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ப்ரதிஷ்டா என்பவர் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினரின், தீவிர விசாரணையில், குழந்தையின் தந்தை ராஜ்குமாரே குழந்தையை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ராஜ்குமார் தெரிவித்தார். ராஜ்குமாரை கைது செய்த வியாசர்பாடி காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jul 19, 2024 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

