Driver Dies By Suicide: செல்போன் செயலி மூலம் ரூ. 1 லட்சம் கடன்; புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால், ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை..!

சென்னையில் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால், வாங்கிய கடனை செலுத்த தவறிய ஓட்டுநர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Poison Suicide (Photo Credit: Pixabay)

ஜூலை 13, ஆவடி (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி பாரதி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் சத்யா நாராயணன் (வயது 37). இவர் தனது மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். சத்யா நாராயணன், ஆவடி அடுத்த காட்டூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தனது செல்போன் செயலி மூலம் ரூ. 1 லட்சம் கடன் (Debt) வாங்கியுள்ளார். அந்த கடனை செலுத்த தவறியதால், பல எண்களில் இருந்து அவருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் வந்துள்ளன. Private Company Involved in Money Scam: அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரூ. 31 லட்சம் பணமோசடி; மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு..!

மேலும், மர்ம நபர்கள் சிலர் அவருக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனையடுத்து, சத்யா நாராயணன் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்றும், அவரது தாயார் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் அவர்கள் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, ஆவடி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், அவரது மனைவியின் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியுள்ளனர். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்தை (Poison) குடித்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சத்யா நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.