Private Company Involved in Money Scam: அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரூ. 31 லட்சம் பணமோசடி; மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு..!

மதுரையில் அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக 106 பேரிடம் பணம் வசூலித்து தனியார் பேருந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Private Company Involved in Money Scam: அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரூ. 31 லட்சம் பணமோசடி; மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு..!
Scam Alert (Photo Credit: Pixabay)

ஜூலை 13, அவனியாபுரம் (Madurai News): மதுரையில் உள்ள விமானநிலையத்தில் இருந்து அயோத்திக்கு (Ayodhya) புனித பயணம் அழைத்து செல்வதாகக் கூறி, தனியார் டிராவல்ஸ் நிறுவனம் சுமார் 106 பேரிடம் பணம் வசூலித்துள்ளது. ஆனால், பயணத்திற்கு ஏற்பாடு செய்யாததால், மதுரை விமான நிலையம் (Madurai Airport) வந்த அவர்கள் அங்கு தகராரில் ஈடுபட்டனர். Student Dies By Suicide: பள்ளி நிறுவனர் கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.. குடும்பத்தினர் சோகம்..!

மதுரையில் இருந்து டெல்லி வழியாக தனியார் விமானத்தில் அயோத்திக்கு ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச்செல்வதாகக் கூறி, சேலத்தை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி மதுரை விமானநிலையத்தில் இருந்து 106 பயணிகளையும் அழைத்துச் செல்வதாக, ஒரு நபருக்கு விமான கட்டணம், தங்கும் வசதி உள்ளிட்ட செலவுகள் என தலா ரூ. 29 ஆயிரம் வசூலித்தது. இதனையடுத்து, அயோத்தி செல்வதற்காக 106 பயணிகளும் நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது அவர்களின் பயணத்திற்கு எந்தவித ஏற்பாடுகளையும் தனியார் நிறுவனம் செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தனியார் நிறுவன மேலாளர் ராஜா என்பவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தரப்பில் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி அன்று அயோத்தி அழைத்து செல்வதாக கூறினர். இதனையடுத்து, பயணிகள் அனைவரும் சமாதானம் அடைந்தனர். பின்னர், அந்த நிறுவன ஏற்பாடு செய்த சொகுசு பேருந்தில் பயணிகள் 106 பேரும் சேலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

(The above story first appeared on LatestLY on Jul 13, 2024 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).