Father Hanging Suicide: பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை; ஜாமீனில் வெளிவந்த தந்தை தூக்குப்போட்டு தற்கொலை..!
தென்காசியில் தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கைதாகி ஜாமீனில் வெளிவந்த தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார். .
ஜூன் 01, சிவகிரி (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான கூலித் தொழிலாளி, தனது 2 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த, புகாரின்பேரில் சிவகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். Broker Suicide: கடன் தொல்லையால் அவதி; வீட்டு தரகர் விஷம் குடித்து தற்கொலை..!
இந்த வழக்கில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் தினமும் மாலை நேரத்தில் சிவகிரி காவல்நிலையத்த்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தொழிலாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தொழிலாளி தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் சிவகிரி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, நேற்று அதிகாலையில் திடீரென தொழிலாளி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். பின்னர், தகவலறிந்து வந்த சிவகிரி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jun 01, 2024 12:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

