Minor Girl Pregnant: இன்ஸ்டாகிராம் பழக்கம்; சிறுவனால் கர்ப்பமான 15 வயது சிறுமி..!
சென்னையில் 15 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் 15, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும், கடந்த 8 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். UGA Vs NZ Highlights: 40 ரன்களில் சுருண்ட உகாண்டா; நியூசிலாந்து அணி அபார வெற்றி..!
இந்நிலையில், அந்த சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 15, 2024 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

