Husband Killed Wife: மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்ட கணவர்..!
தூத்துக்குடியில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரை தூக்கில் தொங்கவிட்டு அவரது கணவர் தப்பியோடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 20, தூத்துக்குடி (Tuticorin News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே ராமச்சந்திரபுரம் கிராமத்தில் வசித்து வந்த தம்பதி அழகு பாண்டி (வயது 51)-கூரியம்மாள் (வயது 46). இத்தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். மகளுக்கு திருமணம் ஆகி தனது குடும்பத்துடன் வசித்துள்ளார். Ebrahim Raisi Helicopter Crash: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி; ஈரானிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.! டிரோன் காட்சிகள் இதோ.!!
இந்நிலையில், அழகு பாண்டி மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது மனைவியை வீட்டில் இருந்த கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயத்துடன் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், சேலையை கொண்டு அவரது கழுத்தை இறுக்கி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, விளாத்திகுளம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கூரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அழகு பாண்டியை தேடி வந்த நிலையில், அவரே காவல்நிலையத்தில் வந்து சரணடைந்தார். பின்னர், அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 20, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

