வானிலை: வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு சாதகமான சூழல்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென்மேற்குப்பருவமழை தனது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணிக்கும் நிலையில், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் நிலவி வருகிறது.

வானிலை: வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு சாதகமான சூழல்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 23, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) நிலவியிருந்த கடந்த 24 மணி நேரத்திற்கான மாற்றத்தை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் (TN Weather Update) ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 3 சென்டிமீட்டர் மழையும், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 38.7 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 20.2 டிகிரி செல்சியசும் ஈரோட்டில் பதிவாகியுள்ளது.

வரும் 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் நாளைய வானிலை (Tomorrow Weather) மழை நிலவரம்:

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். 23ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சூரைக்காற்று ஒரு சில இடங்களில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். Shocking Video: சாலையில் நடந்து சென்ற பெண், குழந்தையை கொடூரமாக தாக்கிய நாய்கள்; பதறவைக்கும் காணொளி.!

சென்னையில் (Chennai Weather Today) வானிலை எப்படி?

25 முதல் 27ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28 முதல் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையை பொறுத்தவரையில், அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி, வடகிழக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும்.

அதேபோல, அரபிக் கடலில் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடலின் மேற்கு பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல், கேரள-கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையத்தின் அறிவிப்பில் எச்சரிக்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).