Fire Breaks Out In Chennai: தீ விபத்தால் புகை மண்டலமான கிடங்கு.. சென்னையில் நடந்த தீ சம்பவம்..!

சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Fire Explosion (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, சென்னை (Chennai): சென்னை மடிப்பாக்கம் (Madipakkam) அருகே இருக்கக்கூடிய ராம் நகர் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் சேமிப்பு கிடங்கு ஒன்றுள்ளது. அந்த கிடங்கில் தற்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் கடும் புகை பரவி வருகிறது. ஆரம்பத்தில் குடோனுக்குள் மட்டும் பற்றிய தீயானது, பின்னர் குடோனை சுற்றி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள், மின் சாதன பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை மீது பரவியது. Actor Vishweshwara Rao Passed Away: பிரபல தமிழ் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

தற்போது ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படும் பணியில் தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தீ மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement