Actor Vishweshwara Rao Passed Away: பிரபல தமிழ் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!
நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இவர் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
ஏப்ரல் 02, சென்னை (Chennai): நடிகர் விஷ்வேஸ்வர ராவ் (Actor Vishweshwara Rao) திரைப்படங்கள் சீரியல்கள் என நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதிலும் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிகை லைலாவின் அப்பாவாக நடித்திருந்தார். இவர் ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டாராம். இவருக்கு வயது 62. Baltimore Bridge Collapse: அமெரிக்காவில் இடிந்து விழுந்த பாலம்.. 7 நாட்களாக சிக்கி தவிக்கும் இந்தியர்கள்..!
இப்படியான நிலையில் இவர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறப்பிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 05:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

