Mysterious Gang Stole Gold And Silver: நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை..! அதிகாலையில் நடந்த துணிகர சம்பவம்..!
காரைக்குடியில் நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 கிலோ வெள்ளி மற்றும் 120 சவரன் தங்கம் முதலிவற்றை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
மே 21, காரைக்குடி (Sivagangai News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி 5-வது விளக்கு பகுதியில், சுந்தரம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் தங்கநகை மற்றும் வெள்ளி பொருட்கள் செய்யும் வேலை பார்த்து வருகிறார். நகை செய்ய வழக்கமாக சென்னை சென்று தங்கம், வெள்ளி வாங்கி வருவார். Son Killed Mother Adulterer: தாயின் கள்ளக்காதலன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை; 17 வயது மகன் ஆத்திரம்..!
இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து வந்த அவர், அவரது வீட்டின் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்னையில் இருந்து 120 சவரன் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி வாங்கி வந்துள்ளார். இதில், நகை வியாபாரியின் வீட்டிற்கு மிக அருகில் சென்றுக் கொண்டிருக்கும் போது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் இவரிடம் கத்தியை (Threatening With A Knife) காட்டி மிரட்டி, அவரது கையில் இருந்த பையை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழிப்பறி (Robbery) சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on May 21, 2024 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

