Cell Phone Exploded In Vande Bharat Train: வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட செல்போன் வெடிப்பு; பயணிகள் அலறல்.. ரயிலில் பரபரப்பு..!

சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் பயணி ஒருவர் சார்ஜ் போட்ட செல்போன் வெடித்ததால், ரயிலில் பரபரப்பு நிலவியது.

Cell Phone Exploded In Vande Bharat Train: வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட செல்போன் வெடிப்பு; பயணிகள் அலறல்.. ரயிலில் பரபரப்பு..!
Vande Bharat Train (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 06, ஆம்பூர் (Tirupathur News): சென்னையில் இருந்து மைசூர் (Chennai To Mysore) செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணியின் செல்போன் சார்ஜ் போட்ட போது செல்போன் வெடித்ததால் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து மைசூர் செல்லும் C11 வந்தே பாரத் ரயில் (C11 Vande Bharat Train), ஆம்பூரைக் கடந்து ரயில் சென்றுக் கொண்டிருந்தபோது ரயிலில் பயணித்த குஷ்நாத்கர் என்பவர் அவருடைய செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து செல்போன் வெடித்ததால் (Cell Phone Blast) ரயிலில் பரபரப்பு நிலவியது. TN Weather Update: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இதனால், ரயிலில் பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர். மேலும், செல்போன் வெடித்து புகை வந்ததால், பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ரயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு, புகை முழுவதும் வெளியேற்றப்பட்ட பின்னர் சுமார் அரை மணிநேரம் கழித்து காலதாமதமாக வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).