Dead Dog In School Drinking Water Tank: பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம்.. மாணவர்கள் அதிர்ச்சி..!

காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Dead Dog In School Drinking Water Tank: பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம்.. மாணவர்கள் அதிர்ச்சி..!
Dead Dog In School Drinking Water Tank (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 22, காஞ்சிபுரம் (Kanchipuram): காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பி.எஸ்.சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பொங்கல் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை திறந்துள்ளனர். அப்போது, குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். Car Accident: உளுந்தூர்பேட்டை மேம்பாலத்தில் விபத்து... விபத்தில் காவலர், அவரது மனைவி உயிரிழப்பு..!

இதை தொடர்ந்து, தலைமை ஆசிரியர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த போது, நாய் ஒன்று அழுகிய நிலையில் மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இருந்த நாயை அப்புறப்படுத்தினர். மேலும் பிளீச்சிங் பவுடரை துாவி சுத்தம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 22, 2024 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).