School Boy Sexual Harassment: ஓரினச்சேர்க்கை செய்ய வற்புறுத்தி கொலை – பள்ளி மாணவன் வெறிச்செயல்..!

பாலியல் தொல்லை கொடுத்து சிறுவனை 12-ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.

School Boy Sexual Harassment: ஓரினச்சேர்க்கை செய்ய வற்புறுத்தி கொலை – பள்ளி மாணவன் வெறிச்செயல்..!
Murder | crime file pic (Photo Credit: pixabay)

மார்ச் 15, தர்மபுரி (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்த கூலித்தொழிலாளிக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். சிறுவன் அருகே உள்ள அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். மேலும், சிறுவன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை போட்டிருந்தான். அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீரென  நேற்று முன்தினம் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை பல இடங்களில் சென்று தேடி பார்த்தும் காணாததால், உடனடியாக அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் அந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை பார்த்தனர். Patient Dead In Hospital: நெஞ்சுவலியில் அவதிபட்ட நோயாளி பரிதாபமாக பலி – அவசர ஊர்தி வராததால் நேர்ந்த சோகம்..!

இதன் மூலம், அதே கிராமத்தில் உள்ள 12-ஆம் வகுப்பு மாணவன் மாங்காய் பறிக்க போவோம் எனக் கூறி அந்த சிறுவனை கிராமத்தின் வெளியே உள்ள விவசாய நிலத்திற்கு கூட்டிச் சென்றுள்ளான். இதில் உள்ள காட்சிகளை வைத்து 12-ஆம் வகுப்பு மாணவனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவன் அளித்த வாக்குமூலத்தில், “அந்த சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் என விரும்பினேன். அதனால், அவனிடம் இவ்வாறு பொய் சொல்லி அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கை செய்ய சொல்லி வற்புறுத்தினேன் என கூறியுள்ளான். மேலும், சிறுவன் நடந்ததை பெற்றோரிடம் கூறிவிடுவேன் என சொன்னான். இதனால் நான் அவனை கண்டித்தும், அவன் கேட்காததால் அருகில் இருந்த கிணற்றில் அவனை தள்ளிவிட்டேன்” என பதில் அளித்துள்ளான்.

இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் தர்மபுரி தீயணைப்பு படையினர் அந்த கிணற்று பகுதிக்கு சென்றனர். சுமார் இரண்டு மணிநேர தேடலுக்குப்பின் தீயணைப்பு வீரர்கள் அந்த சிறுவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர், சிறுவனின் உடலை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர்.

இது தொடர்பாக அதியமான்கோட்டை காவல்துறையினர் 12-ஆம் வகுப்பு மாணவனின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 15, 2024 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).