Minor Girl Pregnancy: 17 வயது சிறுமி கர்ப்பம் – தகாத உறவால் நடந்த விபரீதம்..! இளைஞருக்கு வலைவீச்சு..!!

சென்னையில் குழந்தையை தெருவில் வீசி சென்ற தாய் 17 வயது சிறுமி ஆவார்.

Baby (Photo Credit: Pixabay)

மார்ச் 12, சென்னை (Chennai News): சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தெருவில் குழந்தை அழுகின்ற குரல் கேட்டு அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் சந்தேகமடைந்து உடனடியாக, திருவல்லிக்கேணி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக கொண்டு சென்றனர். Highway Accident: ஈரோட்டில் 3 பேர் பலி – கட்டுப்பாட்டை இழந்த கரும்பு லாரியால் சோகம்..!

சிறுமி கர்ப்பம்: இதுகுறித்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குழந்தையை விட்டு சென்ற தாய் அருகில் உள்ள விடுதியில் தங்கிருந்தாக தெரிந்தது. மேலும், 17 வயது சிறுமி தான் இந்த குழந்தையின் தாய் என்பதும் கண்டறியப்பட்டது. சிறுமியின் பெற்றோர் கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் ஆவர். சொந்த ஊர் மதுரை ஆகும். இந்த சிறுமி, அங்கு ஒரு வாலிபருடன் பழகி தகாத உறவில் இருந்து கர்ப்பம் அடைந்துள்ளார். சிறுமி கர்ப்பிணியாக இருப்பது வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்கும் என அறிந்து, அவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும்போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அந்த குழந்தையை தெருவில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

தற்போது, திருவல்லிக்கேணி காவல்துறையினர் அந்த சிறுமியையும், அவருடைய குழந்தையையும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுமியை கற்பழித்த வாலிபர் மீது காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement