Highway Accident: ஈரோட்டில் 3 பேர் பலி – கட்டுப்பாட்டை இழந்த கரும்பு லாரியால் சோகம்..!
சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மார்ச் 12, ஈரோடு (Erode News): ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியையடுத்து உள்ள திம்பம் மலைப்பாதையில் லாரி ஒன்று கரும்புகளை ஏற்றி கொண்டு சென்றது. அதன் அருகே கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே சென்றுகொண்டிருந்த காரின் மீது கவிழ்ந்து, காரில் பயணம் செய்த 6 பெரும் அதனுள் சிக்கிக்கொண்டனர். லாரி கவிழ்ந்த நிலையில், அதிலிருந்த கரும்பு கட்டுகள் சரிந்து காரின் மீது விழுந்து நசுங்கியது. School Boy Died: தண்ணீர் கேன் தூக்கிச் சென்ற மாணவன் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை..!
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை இணைக்க கூடிய, மைசூரு மற்றும் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், 27-வது கொண்டை ஊசி வளைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.
மேலும், இந்த விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கு இடையேயான வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Mar 12, 2024 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

