Military Man Arrested: திருமண ஆசை வார்த்தைக் கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; ராணுவ வீரர் கைது..!
மதுரையில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 27, உசிலம்பட்டி (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகன் ராமன். இவர், இந்திய ராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இளம்பெண் ஒருவர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். Kalyana Veetu Milagu Rasam Recipe: சுவையான முறையில் கல்யாண வீட்டு மிளகு ரசம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
அதில், 'ராணுவ வீரரான ராமன், என்னுடன் நட்பாக பழகி திருமணம் ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். இதனால், கருவுற்று இருந்த என்னை மிரட்டி கருவை கலைக்க வைத்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்' என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ராமனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வந்த ராமன், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுதொடர்பாக ராணுவ வீரர் (Military Man) ராமனை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, இளம்பெண் குடும்பத்தினர் ராமனை தாக்கிக் கொண்டதால் காவல்நிலையம் முன்பு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
(The above story first appeared on LatestLY on Jun 27, 2024 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

