Jewelery Stolen From Teachers House: பாடம் எடுத்த ஆசிரியை வீட்டில் நகை திருட்டு; 20 வயது வாலிபர் அதிர்ச்சி செயல்..!

திருவள்ளூரில் வாலிபர் ஒருவர் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jewelery Stolen From Teachers House: பாடம் எடுத்த ஆசிரியை வீட்டில் நகை திருட்டு; 20 வயது வாலிபர் அதிர்ச்சி செயல்..!
Theft (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 04, ஆவடி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியை அடுத்து உள்ள திருநின்றவூர் தாசர்புரம் 3-வது தெருவில் வசித்து வரும் தம்பதி கிருபை ஜான் (வயது 58)-தீபம் (வயது 55). இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். Child Baby Slips Into Borewell: 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது; மீட்பு பணிகள் தீவிரம்..!

இந்நிலையில், சென்ற மாதம் 27-ஆம் தேதி அன்று இவர்களது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்று 30 ஆயிரம் ரூபாய் பணம், 40 பவுன் தங்க நகை உள்ளிட்டவைகளை (A Teenager Stolen Jewlery And Money) திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக, திருநின்றவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டதில், திருநின்றவூர் சுதேசி நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சத்யா (வயது 20) என்பவர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் அந்த ஆசிரியரிடம் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார் என்பதனையும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரிடம் இருந்து 24.5 பவுன் தங்க நகை, 60,610 ரூபாய் பணம், 25 கிராம் வெள்ளி, 2 செல்போன்கள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இவர் திருட்டு வழக்கில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

(The above story first appeared on LatestLY on Apr 04, 2024 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).