Teenager Hanging Suicide: ஆன்லைன் வர்த்தக மோகம்; ரூ.53 இலட்சம் இழப்பால், காதல் திருமணமான இளைஞர் தற்கொலை..! பரிதவிப்பில் மனைவி..!
தேனியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் பணத்தை இழந்ததால், வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 04, தேனி (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே ரங்கநாதபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் தனவந்தன் (வயது 26). இவரது மனைவி பிரியா (வயது 23). இவர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. தனவந்தன், போடியில் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். Minor Girl Sexual Abuse: குடோனில் 14 வயது சிறுமியை சீரழித்த காதலன்; வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!
இந்நிலையில், இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் (Online Trading) அதிகமான முதலீடு செய்து வந்தார். இதில், முதலீடு செய்வதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து, இவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதில், தனவந்தன் சுமார் 53 லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்து, அனைத்தையும் இழந்துள்ளார். இதற்கிடையில், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் மதிய வேளையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனவந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பிறகு, இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனவந்தன் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர். இதுதொடர்பாக, காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
(The above story first appeared on LatestLY on May 21, 2024 07:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

