Teenager Murder: கை துண்டித்து, தலை சிதைக்கப்பட்டு கொடூர கொலை; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் கொண்ட கும்பல், வாலிபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 25, வில்லாபுரம் (Madurai News): மதுரை மாவட்டம், வில்லாபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் கை துண்டிக்கப்பட்டு, தலை நசுங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் மீனாட்சி பஜாரில் வேலை பார்த்து வரும் மனோஜ் என்பது தெரியவந்தது. மேலும், அவருடைய செல்போன் மூலம் சோதனை செய்ததில், 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். Teenager Stabb To Death: காதல் விவகாரத்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; ஒருவர் படுகாயம்.. மதுரையில் பயங்கரம்..!
இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மதுபோதையில் இருந்த மனோஜுக்கும், 5 பேர் கொண்ட கும்பலுக்கும் பாரில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சமாதானம் செய்வதாக கூறி, வயல்வெளிக்கு 5 பேர் கொண்ட கும்பல் கூட்டிச் சென்று, அவரை மது அருந்த வைத்து, பின்னர், இவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை (Knife) எடுத்து மனோஜின் கையை வெட்டியுள்ளனர். மேலும், அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை (Murder) செய்துள்ளனர். இதுதொடர்பாக செல்வராஜ், சுபாஷ், சாய் கார்த்திக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jul 25, 2024 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

