Teenager Was Hacked To Death: முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக்கொலை; வாலிபர் பலி..!
திருவாரூரில் பழக்கடை நடத்தி வந்த வாலிபர், மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 30, வல்லம் (Tiruvarur News): திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மோதிலால் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அப்பு என்ற ஹரிஹரன் (வயது 26). இவர் நீடாமங்கலத்தில் பழக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நீடாமங்கலத்தை சேர்ந்த வினோத் (வயது 24) என்பவரது ஆட்டோவில் (Auto) அப்பு மற்றும் ராஜமுருகன் (வயது 19) ஆகிய இருவரும் திருச்சிக்கு பழங்களை ஏற்றி வருவதற்காக சென்றுள்ளனர். Nothing 2a Special Edition: இந்தியாவில் நத்திங் 2a ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!
அப்போது, தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (National Highway) வல்லம் பகுதியில் இவர்கள் சென்றுக்கொண்டிருக்கும்போது, இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் ஆட்டோ ஓட்டி வந்த வினோத் முகத்தில் மண்ணை தூவினர். மேலும், அவரை அரிவாளால் முதுகில் வெட்டியுள்ளனர். இதனையடுத்து, வினோத் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். இதில், அதிர்ச்சியடைந்த ராஜமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆட்டோவில் இருந்த அப்புவை தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த வினோத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், வியாபாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Apr 30, 2024 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

