Married Woman Death: பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் பலி..! தூக்க கலகத்தில் இருந்ததால் நேர்ந்த சோகம்..!

திருச்சியில் பற்பசை என நினைத்து எலிக்கு வைக்கும் பசையில் பல் துலக்கிய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Married Woman Death: பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் பலி..! தூக்க கலகத்தில் இருந்ததால் நேர்ந்த சோகம்..!
Death File Pic (Photo Credit: Pixabay)

மே 20, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் பகுதியில் உள்ள கே.சாத்தனூரை சேர்ந்த தம்பதி சின்னதம்பி (வயது 35)-ரேவதி (வயது 27). இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சின்னதம்பி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். Groom Attack In Wedding Reception: திருமண வரவேற்பு நிகழ்வில் மணமகன் மீது வாலிபர் சரமாரி தாக்குதல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

இந்நிலையில், சம்பவ நாள் அன்று காலையில் ரேவதி தூக்க கலக்கத்தில் வந்து, பற்பசை (Toothpaste) என நினைத்து, எலிக்கு வைக்கும் பசையை (Rat Glue) வைத்து பல் துலக்கியுள்ளார். இதனையடுத்து, அவர் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுதொடர்பாக கே.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).