Youth Killed in Bilateral Conflict: காதல் விவகாரத்தில் இருதரப்பு மோதல்? - இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை., நண்பர்கள் ஐவர் படுகாயம்.!

ஸ்ரீரங்கம் பகுதியில் காதல் விவகாரத்தில் எழுந்த சண்டையில் இளைஞர் ஒருவர் நண்பர்கள் கண்முன் குத்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். பதற்றம் காரணமாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

ஜூலை 08, ஸ்ரீரங்கம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருவளர்ச்சோலை பகுதியில் வசித்து வருபவர் நெப்போலியன் (வயது 28). இவர் நேற்று மாலை நேரத்தில் நண்பர்களுடன் தனது தெருவில் இருந்துள்ளார். அச்சமயம், அங்கு வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல், நெப்போலியன் மற்றும் அவரின் தரப்பு நபர்களை சரமாரியாக தாக்கி, நெப்போலியனை (Trichy Srirangam Youth Killed) கத்தியால் குத்தி இருக்கிறது. TN Weather Update: தமிழ்நாட்டில் காலை 10 மணிவரையில் 6 மாவட்டங்களில் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

இளைஞர் கொலை & உறவினர்கள் போராட்டம்:

இந்த சம்பவத்தில் நெப்போலியன் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். அங்கு இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நெப்போலியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த நெப்போலியன் தரப்பினர், ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் திரண்டு திடீர் போராட்டம் நடத்தினர்.

அதிரடிப்படை குவிப்பு:

கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான நபர்களுக்கு வலைவீசி இருக்கின்றனர். அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. அது சார்ந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே, இருதரப்பு வாக்குவாதம் மோதலாக மாறி இருக்கிறது. பதற்றம் காரணமாக ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பகுதிகளில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement