Aadhav Arjunan: விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனன்? தவெக-வில் புதிய பொறுப்பு?

கருத்தியல் ரீதியாக விசிகவுக்குள் ஆதவ் அர்ஜுனனின் குரல் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர் விரைவில் தமிழக வெற்றி கழகத்துடன் கைகோர்த்து செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aadhav Arjunan: விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனன்? தவெக-வில் புதிய பொறுப்பு?
Aadhav Arjunan | TVK Vijay (Photo Credit: @Sarvesh21978104 X)

ஜனவரி 31, நீலாங்கரை (Chennai News): விளையாட்டு வீரராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனன் (Aadhav Arjunan), தன்னை அரசியலில் களமிறக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (Viduthalai Chiruthaigal Katchi) இணைந்து பணியாற்றினார். அவருக்கு விசிக (VCK)-வின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்தாலும், திமுக (DMK) அரசின் ஒருசில செயல்பாடுகளுக்கு எதிராக விசிக தனது கருத்துக்களை முன்வைத்தது இல்லை. விசிக-வின் கொள்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பது, ஆட்சியை கைப்பற்றுவது எனினும், பொதுவெளிகளில் திமுக கூட்டணியுடன் இணைந்ததற்கு பின்னர் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக மட்டுமே விசிக இருந்தது. திமுக கூட்டணிக்கு எதிராக, திமுக அரசுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தது இல்லை. அதிமுக பிரமுகரை துடைப்பத்தால் நொறுக்கிய பெண்கள்.. பாலியல் தொல்லை கொடுத்ததால் சம்பவம்.! 

விசிக-வில் இருந்து விலகிய ஆதவ்:

ஆனால், விசிகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனன் கட்சியின் கொள்கையை பகிரங்கமாக எடுத்துரைத்து பேசி வந்தார். மேலும், திமுகவுக்கு எதிரான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த விஷயம் திமுக தலைமை - விசிக தலைமை இடையே கடும் எதிர்ப்பை கிளப்ப, பொறுத்து பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். ஒருகட்டத்தில் ஆதவ் அர்ஜுனன் தன்னை விசிக்காவில் இருந்து விலகிக்கொண்டார்.

தவெக (TVK Party)-வில் புதிய பதவி?

இந்நிலையில், விசிக-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனன், கருத்து ரீதியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (Tamilaga Vettri Kazhagam) இணைந்து தொடர்பாக தகவல் முன்னதாகவே கசிந்து இருந்தது. ஆனால், இதுகுறித்த எந்த விதமான அதிகாரபூர்வ தகவலும் இருதரப்பு சார்பில் பகிரப்படாமல் இருந்தது. இதனிடையே, ஆதவ் அர்ஜுனனுக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (TVK Vijay), புதிய பொறுப்பு ஒன்று கட்சியில் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல் 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாகி இருந்த நிலையில், இன்று அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் 2026ல் ஆட்சியை பிடிக்க தேவையான முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனனை கட்சியின் புதிய வியூக வகுப்பாளராக நியமித்து உத்தரவிடலாம் எனவும் கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 11:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).