வானிலை: டெல்டா மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஜனவரி 22, சென்னை (Chennai News): வானிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (22-01-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வானிலை (Weather):
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (23-01-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24 முதல் 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். Gold Silver Price: நகைப் பிரியர்கள் ஷாக்.. 60 ஆயிரத்தைக் கடந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!
சென்னையில் மழைக்கு வாய்ப்பு (Chennai Weather Today):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (22-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (23-01-2025), தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளுக்கு நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம். சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 18, 2980 05:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

