Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜனவரி 23, சென்னை (Chennai News): வானிலையில் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் இன்று (23-01-2025) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

வானிலை (Weather):

அதேபோல், நாளை (24-01-2025) முதல் வரும் 29ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Gold Silver Price: "ஷப்பா இப்போவே கண்ண கட்டுதே" இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.. விபரம் இதோ.!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு (Chennai Weather Today):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (23-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.