AIADMK Former MLA Passed Away: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கராஜ் காலமானார்; தலைமை நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல்.!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், தனது 71 வயதில் இயற்கை எய்தினார்.
ஜனவரி 25, நாங்குநேரி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதியின் முன்னாள் (Nanguneri Constitutency) சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கராஜ். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய வாய்ப்பால் நாங்குநேரி தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ள மாணிக்கராஜ், தென் மண்டலத்தில் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வந்தார். தற்போது அவருக்கு 71 வயது ஆகிறது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். Suryakumar Yadav Wins ICC Award: ஐசிசி விருதுகள் 2023… சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற சூர்யகுமார்..!
அதிமுக தொண்டர்கள் இரங்கல்: அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தொடர்ந்து, அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், வீட்டில் அவர் இருக்கும்போது அவரது உயிர் பிரிந்துள்ளது. இந்த தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
புகைப்பட நன்றி: பால்துரை, வள்ளியூர்.
#நாங்குநேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் பாசமிகு அண்ணாச்சி S.#மாணிக்கராஜ் ex MLA அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். வருத்தத்துடன்... D. பால்துரை #வள்ளியூர் தெற்குஒன்றிய #அதிமுக செயலாளர்@AIADMKOfficial @NewsJTamil pic.twitter.com/NMDghWXAiY
— Kathiravan Pauldurai (@KathiravanPaul1) January 24, 2024
(The above story first appeared on LatestLY on Jan 25, 2024 08:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

