Young Woman Poured Petrol And Set Herself On Fire: இன்ஸ்டாகிராம் பழக்கம்; கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு - இளம்பெண் தீக்குளிப்பு..!
சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால், இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 04, பெரம்பூர் (Chennai News): சென்னையில் உள்ள கொடுங்கையூர் எழில் நகர் 1-வது தெருவில் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருபவர் நந்தினி (வயது 28). இவர் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், பிராட்வே அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். Benefits Of Cumin Water: உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சீரக தண்ணீரின் பயன்கள்..!
இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து, மணிகண்டனுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதன்காரணமாக, நந்தினி உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். நந்தினி தொடர்ந்து போன் செய்தும் அதனை எடுக்காமல், அவரை விட்டு விலகியுள்ளார். இந்நிலையில், கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துகொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல், மணிகண்டன் வேலை செய்யக்கூடிய தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்று நந்தினி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த நந்தினி, தனது இருசக்கர வாகனத்தில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, திடீரென உடலில் (Young Woman Herself On Fire) ஊற்றி தீக்குளித்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தீயை அணைக்க முயன்றார். அதில் நந்தினிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து, மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 21, 2024 07:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

