Sivakasi Fire Accident: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடித்து கோர விபத்து.. பெண்கள் உட்பட 8 பேர் பலி..!

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sivakasi Fire Accident: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடித்து கோர விபத்து.. பெண்கள் உட்பட 8 பேர் பலி..!
Sivakasi Fire Accident (Photo Credit: @ani X)

மே 09, சிவகாசி (Sivakasi News): விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் என்ற பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 50 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 200 க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. Tenkasi District Government Head Hospital Won Kayakalp: தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை.. காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை..!

இதில் கட்டிடங்கள் இடிந்தன, 7 அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மிகவும் அதிகமான தீக்காயங்களுடன், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on May 09, 2024 05:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).