Annamalai Latest Speech: தமிழகத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட கிளி பறக்க தயராகிவிட்டது - அண்ணாமலை பரபரப்பு பேச்சு.!

பாஜகவினர் இனி கூனிக்குறுகி வாக்கு சேகரிக்க வேண்டாம். மீனவர்களின் பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே திமுக, காங்கிரசின் வேலை என அண்ணாமலை பேசினார்.

Annamalai Latest Speech: தமிழகத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட கிளி பறக்க தயராகிவிட்டது - அண்ணாமலை பரபரப்பு பேச்சு.!
Tamilnadu BJP President Annamalai (Photo Credit: Twitter)

மார்ச் 23 , தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக (BJP) செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai), கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் தொடர்பாக பேசினார்.

அவர் பேசுகையில், "இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல்களம் என்பது மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் கூண்டில் அடைபட்டு இருந்த கிளி, பறக்க தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சியின் நம்பிக்கை மக்களுக்கு வந்துள்ளது. Madhya Pradesh Earthquake: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக நிலநடுக்கம்..! மக்கள் அதிர்ச்சி.!

பாரதிய ஜனதா கட்சியினர் கூனிக்குறுகி வாக்கு சேகரித்த நிலை இன்று எங்குமே இல்லை. நெஞ்சை நிமிர்த்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகத்தாருக்கு பாரதிய ஜனதா கட்சி காங்கிரசை விட 45% அதிக நன்மைகளை செய்துள்ளது. மீனவர்களின் பிரச்சனையை மையப்படுத்தி அரசியல் செய்வது காங்கிரஸ் மற்றும் திமுகவின் வழக்கம்" என பேசினார்.

(The above story first appeared on LatestLY on Mar 24, 2023 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).