BJP Annamalai Election Campaign In Coimbatore: பாஜக தலைவர் அண்ணாமலை கோவை வருகை.. உற்சாகமாக நடனமாடி வரவேற்ற மூதாட்டி..!

கோவை மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

BJP Annamalai Election Campaign In Coimbatore: பாஜக தலைவர் அண்ணாமலை கோவை வருகை.. உற்சாகமாக நடனமாடி வரவேற்ற மூதாட்டி..!
BJP Election Campaign (Photo Credit: Facebook)

ஏப்ரல் 04, கோயம்புத்தூர் (Coimbatore): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Japan Earthquake: தைவானைத் தொடர்ந்து ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா?.!

மேலும் தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை (Tamil Nadu BJP president K Annamalai) கோவை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கோவை தொகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஜமாப் இசையுடன் அண்ணாமலையை வரவேற்க மூதாட்டி ஒருவர் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

(The above story first appeared on LatestLY on Apr 04, 2024 11:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).