Nainar Nagenthiran: பாஜக + அதிமுக இணைந்தது ஏன்? இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்.!

ஊழல் செய்ய, குடும்ப ஆட்சியை நிலைநாட்ட பாஜக இல்லை. இங்கு உழைக்கும் யாவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Nainar Nagenthiran: பாஜக + அதிமுக இணைந்தது ஏன்? இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்.!
Nainar Nagenthiran (Photo Credit: @Annamalai_K X)

ஏப்ரல் 16, கமலாலயம் (Chennai News): சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagenthiran Latest Speech Today), "காங்கிரஸ் காட்சிபோல ஊழல் கட்சி இல்லை. ஊழல் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. பாஜக குடும்பக்கட்சி இல்லை. அண்ணாமலையைப்போல எனக்கும் 3 ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக குடும்ப ஆட்சியை நடத்துகிறது. கலைஞர், ஸ்டாலின், ஸ்டாலின் பேரன் என குடும்ப கட்சி திமுகவில் தொடருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளது. இரவில் பெண்கள் சென்றால் சார் அழைக்கிறார் என்ற அவளை நிலை இருக்கிறது. Nellai Iruttukadai: இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் வரதட்சனை புகார்.. எதிர்ப்பு தெரிவித்த மாப்பிள்ளை..! நடந்தது என்ன..?

கூட்டணி விவகாரங்களை தேசிய தலைமை கவனிக்கும்:

அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுகவுக்கு எதிராக நாங்கள் திறந்துள்ளோம். நாங்கள் 4 பேர் இருந்தாலும் எங்களின் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அண்ணாமலை புயலாக இருப்பார், நான் தென்றலாக இருப்பேன். திமுக வரும் தேர்தலில் டெபாசிட் வாங்காது. அதிமுக, பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி இடம் தொடர்பான விஷயங்களை பாஜக மேலிடம் பார்த்துக்கொள்ளும். அமித் ஷா - எடப்பாடி பழனிச்சாமி இணைந்து திமுகவுக்கு எதிராக ஓரணியில் இணைய முடிவெடுத்து கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார். கூட்டணி விஷயத்தில் உள்ளவற்றை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்" என பேசினார்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).