Bus Conductor Attacked: உறவினர்களுடன் சேர்ந்து பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிய பயணி: தஞ்சாவூரில் நடந்த கொடூரம் !

தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உறவினர்களை வரவழைத்து அவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

Bus Conductor Attacked: உறவினர்களுடன் சேர்ந்து பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிய பயணி: தஞ்சாவூரில் நடந்த கொடூரம் !
Bus Conductor Attack (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 31, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர்  நடத்துனரை, உறவினர்களுடன்  சேர்ந்து சரமாரியாக அடித்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த அந்த நபரும் நடத்துணரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர் சுந்தரபெருமாள் கோயில் பகுதியில் இருக்கும் தன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். பேருந்து  சுந்தரபெருமாள் கோயில் பகுதியை நெருங்கும் போது பத்துக்கும் அதிகமான இளைஞர்கள்  பேருந்தை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். Indian Cricket Telecast Rights: இந்திய அணியின் கிரிக்கெட் ஆட்டத்திற்கான டிஜிட்டல் உரிமையை பெற்றது விகாம் 18 குழுமம்..!

பின்னர் அந்த இளைஞர்கள் நடத்துனரை இரக்கமின்றி தாக்கினர். மேலும் அவர்கள் தடுக்க வந்த ஓட்டுனரையும் அடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். இளைஞர்களின் சரமாரியான தாக்குதலால் படுகாயம் அடைந்த பேருந்தின் நடத்துனர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் நடத்துனரை தாக்கிய போது  பேருந்தில் இருந்த பயணிகள்  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார்  தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Aug 31, 2023 07:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).