TN Police Suicide: விடுமுறை கிடைக்காததால் குடும்பத்தில் விரிசல்; விரக்தியில் உயிரை மாய்த்த இளம் காவலர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி.!

காதலித்து கரம்பிடித்த மனைவியையும் பார்க்க முடியவில்லை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் கவனிக்க வழியின்றி தவித்த இளம் காவலர், போனில் தான் குடும்பம் நடத்துகிறேன் என பகீர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

TN Police Suicide: விடுமுறை கிடைக்காததால் குடும்பத்தில் விரிசல்; விரக்தியில் உயிரை மாய்த்த இளம் காவலர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி.!
Cop Arun Kumar | Suicide File Pic (Photo Credit: Facebook / Suicide)

ஜூலை 11, அயனாவரம் (Chennai News): விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் குமார். இவர் சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் தங்கிருந்து தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். திருநெல்வேலியில் காவலராக பணியாற்றி வரும் பெண்மணி பிரியா. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறவே, இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். பணி நிமித்தம் காரணமாக இருவரும் வெவ்வேறு பகுதிகளில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். Kanal Kanna Arrested: விசாரணைக்கு நேரில் சென்ற கனல் கண்ணன் அதிரடி கைது; மதபோதகரின் நடனத்தை சர்ச்சையாக பதிவிட்ட வழக்கில் அதிரடி.!

இந்நிலையில், அயனாவரத்தில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் அருண் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு வந்த நண்பர்கள் அருண் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், இதுகுறித்து தலைமை செயலக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அருண் குமார் தனது காவல் சீருடையிலேயே சடலமாக தொங்கி இருக்கிறார். முதற்கட்ட விசாரணையில், தம்பதிகள் வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்து வந்ததால், சந்திக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது பின்னாட்களில் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அருண்குமாரின் தாய் பார்வையற்றவர், தந்தை காது கேட்பதில் குறைபாடு கொண்டவர்கள் ஆவார்கள். Beetroot Benefits & Dangerous: பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ.. தப்பி தவறியும் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடாதீங்க.!

தாய்-தந்தைகளை பராமரிக்கும் விஷயத்திலும் பிரியா தடையாக இருந்த நிலையில், மனதளவில் உடைந்துபோன அருண்குமார் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவருகிறது. தற்கொலை செய்வதற்கு முன்னதாக அருண்குமார் கடிதமும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், "விடுமுறை கிடைத்ததும் ஊருக்கு வந்து மனைவியை காணுகிறேன் என நான் கூறியதற்கு, அவர் (பிரியா) என்னை ஆபாசமாக திட்டினார்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருமணத்திற்கே 10 நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைத்த நிலையில், அதன்பின் விடுமுறை கிடைக்கவில்லை. எனது சடலத்தை கூட மனைவியை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். காவலர் அருண் குமாரின் தற்கொலை விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினருக்கும் குடும்பம் உண்டு என்பதை உணர்ந்து, அவர்களுக்கான தனிமனித உரிமைகளை குறைந்தபட்சமாவது வழங்க வேண்டும் என்பதே பலரின் ஆதங்க குரலாக இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Jul 11, 2023 08:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).