Chennai MTC Bus: ஓடும் பேருந்தில் உடைந்த பலகை; நூலிழையில் உயிர்தப்பிய பெண்மணி.. பதைபதைப்பு சம்பவம்.!
மாநகர பேருந்தில் பயணம் செய்த பெண்மணி நூலிழையில் மரணத்தின் பிடியில் இருந்து தப்பிய சம்பவம் நடந்துள்ளது
பிப்ரவரி 06, சென்னை (Chennai): சென்னையில் உள்ள திருவேற்காடில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி செல்லும் சென்னை மாநகர பேருந்து (தடம் எண் 59), இன்று காலை அமைந்தகரை பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. அச்சமயம் திடீரென பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்திற்குள்ளாகியது. உடைந்த இருக்கையில் பெண்மணி ஒருவர் இருக்க, அவர் சறுக்கி தொங்கியபடி அலறி இருக்கிறார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், காயமடைந்த பெண்மணி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நல்வாய்ப்பாக பேருந்து நிறுத்தப்பட்ட காரணத்தால் பெண்மணி காயத்துடன் உயிர்தப்பினார். இந்த சம்பவம் பிற பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாற்று பேருந்து உதவியுடன் பயணிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். Nokia Restructure in India: புதிய உத்வேகத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திய நோக்கியா; இனி எல்லாம் அதிரடி தான்.!
திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி பயணித்த சென்னை மாநகர அரசு பேருந்தில் பெண்மணி நூலிழையில் உயிர் தப்பினார். #Chennai | #Thiruverkadu | #ChennaiMTCBus | #Tamilnadu | #LatestLYTamil
Pic Cr: Maalaimalar pic.twitter.com/9NBtjZPx51
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 6, 2024
(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

