Couple Suicide: குழந்தையில்லாத ஏக்கம்.. 13 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக வாழ்ந்து தம்பதி விபரீத முடிவு.. துர்நாற்றத்தால் அம்பலமான உண்மை.!
கணவன் - மனைவியாக அன்போடு வாழ்ந்து வந்தாலும், நமக்கென குழந்தையில்லையே என விரக்தியில் வருந்திய தம்பதி விபரீத முடிவு எடுத்ததா? என சோகத்தை ஏற்படுத்தும் தம்பதியின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வருகிறது காவல்துறை.
டிசம்பர் 29, புளியந்தோப்பு: கணவன் - மனைவியாக அன்போடு வாழ்ந்து வந்தாலும், நமக்கென குழந்தையில்லையே என விரக்தியில் வருந்திய தம்பதி விபரீத முடிவு எடுத்ததா? (Husband & Wife death Mystery) என சோகத்தை ஏற்படுத்தும் தம்பதியின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வருகிறது காவல்துறை.
சென்னையில் உள்ள புளியந்தோப்பு (Pulianthope, Chennai), சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 44). இவரின் மனைவி துலுக்கானம் (வயது 35). தம்பதிகள் சென்னை மாநகராட்சி 128வது வார்டில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக வேலை பார்க்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் குழந்தை இல்லை.
இதனால் தம்பதிகள் மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக தம்பதியின் வீடு பூட்டியவாறு இருந்துள்ளது. இதனால் இருவரும் வெளியூர் சென்றிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் நினைத்துள்ளனர். Blood Art Banned: இரத்தத்தால் ஓவியம் வரைய தடை – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. காரணம் இதுதான்..! பேராபத்துகளை விலைக்கு வாங்கவேண்டும்..!
இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் தம்பதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியேற, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சக்திவேல் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
அவரின் மனைவி துலுக்கானம் கட்டிலில் படுத்த நிலையில் உடல் அழுகி இருந்தது. இதனால் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதிகள் கடந்த 25ம் தேதிக்கு பின்னர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என்பது உறுதியானது.
தம்பதிகள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டனரா? கணவன் - மனைவி தகராறில் துலுக்கானத்தை கொலை செய்து சக்திவேல் தற்கொலை செய்துகொண்டாரா? என பல கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 29, 2022 04:56 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

