வானிலை: இன்று 13 மாவட்டங்களில் கனமழை அலர்ட்; இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!

3 நாட்கள் தமிழகத்தின் வடமாவட்டங்களை தத்தளிக்க வைத்த வைத்த பெஞ்சல் புயல் ஓய்ந்தாலும், அதன் தாக்கத்தால் மழை குறையவில்லை. இன்றும் 10 க்கும் மேற்பட்ட வட-மேற்கு மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை: இன்று 13 மாவட்டங்களில் கனமழை அலர்ட்; இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!
Tamilnadu Rains (Photo Credit: @LokmatTimes_ngp X / @PCSurveysIndia X)

டிசம்பர் 01, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த சில நாட்களாக ஏற்பட்டு இருந்த மாற்றம் காரணமாக, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் தாக்கி இருந்தது. புயல் காரணமாக கனமழை தமிழ்நாட்டில் கொட்டித்தீர்த்தது.

இன்றைய வானிலை (Today Weather):

02-12-2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்‌சராப்பள்ளி, கரூர்‌, தேனி மற்றும்‌ மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

03-12-2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Today):

சென்னை மற்றும்‌ புறநகர்பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய, மிதமான முதல்‌ கனமழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல் பகுதி:

02-12-2024 அன்று தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 03-12-2024 மற்றும்‌ 04-12-2024 வரையில் தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

கேரளா கடலோர பகுதி:

02-12-2024 அன்று கேரள கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்‌தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

(The above story first appeared on LatestLY on Dec 02, 2024 06:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).