வானிலை: 5 மாவட்டங்களில் இன்று கனமழை; இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வானிலை அறிவிப்பை உடனுக்குடன் தெளிவாக படிக்க எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

வானிலை: 5 மாவட்டங்களில் இன்று கனமழை; இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ..!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜனவரி 12, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ கன்னியாகுமரி அடையாமடை பகுதியில் 5 செமீ மழையும், தக்கலையில் 2 செமீ மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக குமரியில் 33.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும், கரூர் பரமத்தியில் 16.5 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையும் பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், கிழக்கு இலங்கைக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 12-01-2025 இன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ யிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌, காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

13-01-2025 மற்றும்‌ 14-01-2025 ஆகிய தேதிகளில் தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 15-01-2025 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜன.18 வரை மழைக்கான வாய்ப்பு எப்படி?

16-01-2025 மற்றும்‌ 17-01-2025 ஆகிய தேதிகளில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 18-01-2025 அன்று கடலோர தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, உள்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. Swami Vivekananda Quotes: 125 வது பிறந்தநாள்; சுவாமி விவேகாந்தன்தாரின் 20 பொன்மொழிகள் இதோ.! 

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

இன்று (12-01-2025) வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான 7 மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (13-01-2025) வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான 7 மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

12-01-2025 மற்றும்‌ 13-01-2025 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

14-01-2025 முதல்‌ 16-01-2025 வரையில் குமரிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மன்னார்‌ வளைகுடாவில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

வங்கக்கடல்‌ பகுதிகள்‌:

12-01-2025 மற்றும்‌ 13-01-2025 ஆகிய தேதிகளில் தெற்கு இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Jan 12, 2025 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).