TN Weather Update: இடி-மின்னலுடன் மழையே வந்தாலும், வெப்ப அலை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் ஐந்து நாட்களில் தமிழகத்தில் லேசான மழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather Update: இடி-மின்னலுடன் மழையே வந்தாலும், வெப்ப அலை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 18, நுங்கம்பாக்கம் (Chennai News): கடந்த 24 மணி நேரத்தில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி இருக்கிறது. அதேபோல, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் இரண்டு சென்டிமீட்டர் மழையும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 41 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 18.6 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

இடி-மின்னலுடன் மழை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அடுத்த ஏழு தினங்களுக்கான நாளைய வானிலை (Tomorrow Weather) முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பதினெட்டாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யப்படும். 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Teacher Dies by Heart Attack: பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போதே மாரடைப்பு; வகுப்பறையில் சுருண்டு விழுந்து ஆசிரியர் பலி..! 

அதிக வெப்பம் & தலைநகரின் வானிலை (Weather):

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக ஒரு சில இடங்களில் இரண்டு டிகிரி முதல் நான்கு டிகிரி வரை இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில இடங்களில் அசௌகரியமும் ஏற்படலாம். தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.

கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகமும் முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல, அரபிக் கடல் பகுதியில் பதினெட்டாம் தேதி முதல் 22ம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடலின் மேற்குப்பகுதி, மத்திய மேற்கு அரபிக் கடல் ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Sep 18, 2024 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).