Gold Silver Price: உச்சக்கட்டம்.. ரூ.75,000 ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

சென்னையில் ஆபரணத்தங்கம் (Gold Rate Today) நேற்று ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்து ரூ.74,000 ஐ கடந்தது. இன்றைய தங்கம் விலையை பொறுத்தவரையில் ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

Gold Silver Price: உச்சக்கட்டம்.. ரூ.75,000 ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Gold Price (Photo Credit : Pixabay)

ஜூன் 14, சென்னை (Gold Price Today): ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், அதிகமாக தங்கத்தை வாங்கிக்குவிக்கும் நாடுகள், தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் விண்ணைமுட்டும் அளவு உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) இன்று சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது.

ரூ.74,000 ஐ கடந்த தங்கத்தின் விலை (Gold Rate Today):

சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தினமும் மாற்றமடையும். கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று (ஜூன் 13) ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்து ரூ.74,000 ஐ கடந்தது. வானிலை: 9 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று (ஜூன் 14) தங்கத்தின் விலை (Gold Rate) உயர்ந்துள்ளது. சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.74,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து கிராம் தங்கம் இன்று ரூ.9,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.120.10 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jun 14, 2025 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).